தமிழ்நாடு

tamil nadu

மாணவர்களுடன் கலந்துரையாடிய டிஜிபி

ETV Bharat / videos

வீடியோ: கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடிய டிஜிபி - தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

By

Published : Feb 18, 2023, 5:19 PM IST

கோயம்புத்தூர்:தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிஞர் அண்ணா நிர்வாக வளாகத்தில் மாணவர் நல மையம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு, வேளாண் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விஷயங்களையும், ஊக்கமூட்டும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது மாணவர்கள் அவருடன் புகைபடங்கள் எடுத்து கொண்டனர். அப்போது பாதுகாவலர்கள் மாணவர்களை தடுத்த போதிலும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து சுமார் அரை மணி நேரம் புகைப்படம் எடுத்து கொண்டு புறப்பட்டார். இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலெட்சுமி மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:நியாயம் கிடைக்கும் வரை உடலை பெற மாட்டோம்: சேலத்தில் மீனவர் ராஜாவின் உறவினர்கள் தர்ணா

ABOUT THE AUTHOR

...view details