தமிழ்நாடு

tamil nadu

கோயில் வரை முட்டி போட்டு சென்று வழிபாடு செய்த மக்கள்

ETV Bharat / videos

புத்தாண்டு 2024: மயிலாடுதுறை அருகே முட்டி போட்டுச் சென்று விநோத வழிபாடு செய்த மக்கள்..! - new year 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 5:23 PM IST

மயிலாடுதுறை:இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்கின்றனர். மேலும், பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று வழிபாட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலையூர் அடுத்த கஞ்சாநகரம் கிராமத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோனியார் ஆலயம் உள்ளது. இங்கு நோய் தீர வேண்டியும், வேண்டிய காரியங்கள் வெற்றி பெற வேண்டியும் 51 ஆண்டுகளாகப் பக்தர்கள் வினோத வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஜனவரி 1ஆம் தேதி அந்தோணியார் ஆலயத்திற்கு எதிரே உள்ள ஊர் பொது குளத்தில் பக்தர்கள் நீராடி விட்டு, குளத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அந்தோனியார் ஆலயத்திற்கு ஈரத்துணியுடன் அங்கப் பிரதட்சணம் செய்தும், முட்டி போட்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி தீபம் அணையாமல் கோயில் வரை வந்தும், தீச்சட்டி ஏந்தியும் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் ஆங்கில புத்தாண்டு தினமான இன்று ஏராளமான பக்தர்கள் குளக்கரையில் நீராடி வழிபாட்டில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details