தமிழ்நாடு

tamil nadu

சுவாமிமலை கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு உற்சவம்

By

Published : Aug 9, 2023, 3:32 PM IST

ETV Bharat / videos

Aadi Krithigai: சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை கோலாகலம்!

தஞ்சாவூர்:அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேகம், தங்க கவசமுடன் வைரவேல் சாற்றும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் கும்பகோணத்திற்கு அருகே அமைந்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 9 ) ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிக்கு திருவிளக்குகள் ஏற்றியும், அர்ச்சனைகள் செய்தும் தரிசனம் செய்தனர்.

அழகன் என்றும்; தமிழ்க் கடவுள் என்றும் போற்றப்படும் முருகனின் இத்திருக்கோயிலில் பிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது தமிழ் வருட தேவதைகள் அறுபது படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வருகை தரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக வரலாறு கூறுகிறது. சிவபெருமானுக்கே குருவானதால் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் சுவாமிநாதசுவாமி எனப் போற்றப்படுகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்தும், நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற சிறப்பு மிக்க தலமாகவும் இத்திருத்தலம் விளங்குகிறது.

பக்தர்கள் பாதுகாப்புக் கருதி சுவாமிமலை காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க:ஜெயிலர் ரிலீஸில் அதிகாலை நேரக் காட்சிகள் இல்லை... பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details