ரயிலில் காசி யாத்திரை சென்ற தமிழக பக்தர்களுக்கு முறையாக சாப்பாடு வழங்கவில்லை என புகார்! - உணவு வழங்கவில்லை என கூறி பக்தர்கள் ஆர்ப்பாட்டம்
Published : Oct 6, 2023, 10:39 PM IST
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து முதல் முறையாக 10 நாள்கள் காசிக்குத் தனி ரயிலில் 1500 பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சென்றனர். இதற்கான தனி சேவையைப் பாலக்காடு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
காசிக்கு ரயிலில் செல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் சாதி, மதங்கள், அரசியல் கடந்து யாத்திரை செல்வதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். மேலும், பத்து ஆண்டுகளாக ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் என்ற அமைப்பு நடத்துகிறோம். காசிக்கு 9 நாள்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு காசி, கயா, பிரயக்ராஜ், அயோத்தி நான்கு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுவிட்டு வருகிற 8ஆம் தேதி பொள்ளாச்சி திரும்பவுள்ளோம்.
இந்த நிலையில் ஜகப்பூர் ரயில்வே நிலையத்தில் தங்களுக்குச் சரிவர உணவு கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்த உணவும் கெட்டுப் போய் இருக்கிறது எனக் கூறி பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். மேலும், பொள்ளாச்சியிலிருந்து காசி யாத்திரை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற பயணிகளுக்குச் சரிவர உணவு வழங்கி, எங்களைப் பாதுகாப்பாக ஊர் அழைத்துச் செல்ல வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.