அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளில் அலங்காரம் - காட்பாடி வஞ்சியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள வஞ்சியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் 3ஆம் வெள்ளியை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 4) நான்காம் ஆண்டாக அம்மனுக்கு, ரூபாய் நோட்டுகளால் சொர்ண லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வஞ்சி அம்மனுக்கு சுவர்ணலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. இவ்வாறு ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்த அம்மனை ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வஞ்சியூர் பகுதி மக்கள் மட்டுமின்றி வேலூர் காட்பாடி, விருதம்பட்டு, கே.வி. குப்பம், லத்தேரி,
குடியாத்தம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:விவசாயி புகாருக்கு சிரித்த மின்வாரிய அதிகாரி: "ஏன் சிரிக்கறீங்க?" - கோபப்பட்ட ஆட்சியர்!