சிசிடிவி: இருசக்கர வாகனத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் - Covai Police searching for the driver
கோவை மணியக்காரன்பாளையம்-கணபதி சாலையில் இருசக்கர வாகனத்தில் 5 மாத கைக்குழந்தை மற்றும் 5 வயது பெண் குழந்தையுடன் சென்று கொண்டிருந்த தம்பதி மீது மணியகாரம்பாளையம் வழியாக வந்த மாருதி 800 கார் அதிவேகமாக மோதியது. அந்த நேரத்தில் கார் ஓட்டுநர் நிற்காமல் அங்கிருந்து சென்றுள்ளார்.
அங்கிருந்தவர்கள் அந்த தம்பதியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். நிற்காமல் சென்ற மாருதி 800 காரை சரவணம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.