பொங்கல் விழாவில் பறை இசைத்து அசத்திய தஞ்சை மேயர்! - தஞ்சாவூர் மேயர் ராமநாதன்
தஞ்சாவூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வரும் 15-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் கலந்து கொண்டார். அப்போது அவர் பாரம்பரிய இசை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுடன் இணைந்து பறை இசைத்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.