தமிழ்நாடு

tamil nadu

பொதுமக்களுக்கு மாநாட்டிற்கான அழைப்பிதழுடன் தக்காளி வழங்கிய நத்தம் விஸ்வநாதன்

ETV Bharat / videos

அதிமுக மதுரை மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்; பொதுமக்களுக்கு மாநாட்டிற்கான அழைப்பிதழுடன் தக்காளி வழங்கிய நத்தம் விஸ்வநாதன்! - Consultation meeting in Dindigul

By

Published : Aug 10, 2023, 11:43 AM IST

திண்டுக்கல்:பழனியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு அதிக அளவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்களை அழைத்துச் செல்வது என்று அதற்கான ஏற்பாடுகளை செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக உடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றுக் கூறினார். மேலும், அண்ணாமலையின் நடைப்பயணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவரது கட்சி விஷயம். அவரிடமே கேளுங்கள் என்று கூறி பதில் அளிக்க மறுத்துவிட்டார். 

தொடர்ந்து ஓபிஎஸ், தினகரன் இணைந்தது பற்றி கேட்டதற்கு ஓபிஎஸ் முடிந்து போன சகாப்தம் என்றும், அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என விமர்சித்து பதில் அளித்தார். பின்னர் 25 ஆவது வார்டு நகர்மன்ற அதிமுக உறுப்பினர் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் ராஜா முகமது ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு மாநாடு அழைப்பிதழ்களை வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சுமார் 500 பேருக்கு வெற்றிலை, பாக்கு மற்றும் மாநாட்டிற்கான அழைப்பிதழுடன் ஒரு கிலோ தக்காளியையும் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details