தமிழ்நாடு

tamil nadu

கோவை

ETV Bharat / videos

கோவையில் UTS நிதி நிறுவனம் மோசடி குறித்து புகார் அளிக்க முகாம்! - Universal Trading Solutions

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 9:35 PM IST

கோவை: யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்(UTS) என்ற தனியார் நிதி நிறுவனம் சென்னை உட்படத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. இதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம் மற்றும் வட்டி தருவதாகப் போலியான வாக்குறுதிகளை அளித்து 75 ஆயிரம் பேரிடம் சுமார் ரூபாய் 1,300 கோடி வரை மோசடி செய்தனர். இது தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தவர்கள், தகுந்த ஆதாரத்துடன் புகார் அளிக்கக் காவல் துறை சார்பில் அறிவுறுத்தி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, கோவையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகம் முன்பு சுமார் 200க்கும் மேற்பட்டோர் மனு அளிக்கக் குவிந்தனர். 

இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "காவல் துறையின் வழிகாட்டுதலின் படி ஏற்கனவே புகார் அளித்த நிலையில், மீண்டும் புகார் அளிக்க வந்துள்ளோம். இந்த நிதி நிறுவன மோசடி தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி நிவாரணம் வழங்குவதாகத் தெரிவித்தனர். ஆனால், இதுவரை எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை. மேலும், தற்போது அந்த விசாரணைக் குழுவையும் கலைத்து விட்டதாகவும் தெரிவித்தனர். 

நாங்கள் உழைத்து சிறுக, சிறுக சேமித்த பணத்தை இழந்துள்ளோம். அந்த நிதி நிறுவனத்தின் பெயரில் பல்வேறு இடங்களில் ஏக்கர் கணக்கில் நிலங்கள் உள்ளன. அவற்றைப் பறிமுதல் செய்தாலே பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தைத் திரும்பச் செலுத்த முடியும்" இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details