குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் - முன்னாள் இந்திய அணி வீரர்கள் பங்கேற்பு! - ஆவடி
Published : Dec 22, 2023, 9:51 AM IST
சென்னை:குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆவடியில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. சென்னை, சி.ஐ.ஐ எனும் இந்திய தொழில் கூட்டமைப்பின் யங் இந்தியா சார்பில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கிரிக்கெட் போட்டி, ஆவடியில் உள்ள முருகப்பா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.
இதில், சி.ஐ.ஐ - யங் இந்தியா - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான காட்சிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், பிரபல இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத், வித்யுத் சிவராமகிருஷ்ணன் மற்றும் அருண் கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்போட்டி, குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டதாக, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில், யங் இந்தியா தேசிய தலைவர் திலிப் கிருஷ்ணா மற்றும் சவுரப் சுரகா ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக விளையாடிய பத்ரிநாத் தலைமையிலான CSK அணி 10 ஓவர்களில் 115 ரன்கள் அடித்தனர். அதனை எதிர்த்து விளையாடிய CII அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.