"ஏழை மாணவர்களின் பசியை போக்கும் திட்டம்" - முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து இரா.தாஸ் கருத்து!
Published : Aug 25, 2023, 10:11 PM IST
திருவள்ளூர்:முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டம் என்பது ஏழை எளிய மாணவர்கள் பசிப்பிணி போக்கும் திட்டம் எனத் தமிழ்நாடு ஆரம்பப்புள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் இரா.தாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஒன்றாம் முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருக்குவளை அரசுப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் அடுத்த புட்லூர் அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளரும் மற்றும் இரா.தாஸ் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக பேசிய அவர், முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டம் ஏழை எளிய மாணவர்களின் பசிப்பிணி போக்கிய திட்டம், என்றும் தாய், தந்தை இல்லாத மாணவர்களின் வறுமையை போகின்ற திட்டம் இதனால் மாணவர்கள் இடைநிற்றலைத் தடுத்து மாணவர்களின் வருகை அதிகரிக்க முடியும்.
மாநகராட்சி பள்ளிகள் மட்டும் வழங்கப்பட்ட வந்த காலை சிற்றுண்டி தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளும் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம் அதனை ஏற்று இன்று தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிக்கு வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்திட வேண்டும்" என அவர் வலியுறுத்தி உள்ளார்.