தமிழ்நாடு

tamil nadu

முதியவர் தாக்குதல்

ETV Bharat / videos

போதை செய்யும் வேலை..பட்டப் பகலில் முதியவர் தாக்குதல் - dhana jeyan

By

Published : Jun 13, 2023, 6:36 PM IST

செங்கல்பட்டு:அகரம்தென் பதவஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் தனஜெயன் (60) இவர் பதவஞ்சேரி பிரதான சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அங்கு இருந்த திருப்ப முனையில் திரும்ப முயன்றுள்ளார்.அப்போது அவ்வழியாக கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் சாலையின் திருப்ப முனையில் நின்றுகொண்டிருந்த தனஜெயன் வாகனத்தில் மோதுவது போல் வந்துள்ளனர்.

பதறிப் போன தனஜெயன் இளைஞர்களிடம் பொறுமையாக வந்திருக்கலாமே என தழு தழுத்த குரலில் கூறியுள்ளார்.அப்போது இருவர்களும் தன்னிலை மறந்து போதையில் இருந்ததால் ஆத்திரம் அடைந்து முதியவரை தாங்கள் வைத்திருந்த பானையால் தலையில் கடுமையாக தாக்கி மேலும் அவரது இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்துச் சென்றனர்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் தனஞ்ஜெயன் அங்கிருந்த  தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின் சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றினார். இது குறித்து சேலையூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது காவலர்கள் புகாரை ஏற்க மறுத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து இரு இளைஞர்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிசிடிவி ஆதாரங்கள் வைத்திருந்தும் சேலையூர் காவலர்கள் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார். பட்டப் பகலில் முதியவரை தாக்கி வாகனத்தின் சாவியை எடுத்துச் சென்ற இளைஞர்கள் மீது வழக்கு பதியாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:திருமாவளவன்மீதுவன்னியர் சங்கம் அவதூறு வழக்கு.. பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details