ஆய்வகத்தில் புகுந்த சிறுத்தை.. கதவை தாளிட்ட ஊழியர்கள்.. பரபரப்பு காட்சிகள் - சிறுத்தை
தெலங்கானா: சங்கரெட்டி மாவட்டம், கடாபோதாரத்தில் உள்ள ஹெட்டிரோ ஆய்வகத்திற்குள் அதிகாலை 4 மணியளவில் லேப் எச் பகுதியில் சிறுத்தை ஒன்று நுழைந்தது. சிறுத்தை வந்ததை பார்த்த உடன் லேப் ஊழியர்கள் அறை கதவை மூடினர். பின்னர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நேரு உயிரியல் பூங்காவின் சிறப்புக் குழுவினரும் அங்கு வந்து, சிறுத்தையை பிடிக்க கடுமையாக முயன்றனர். சுமார் 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுத்தையை பிடிக்க மயக்க ஊசி போடப்பட்டது. சிறுத்தை மயங்கியவுடன் அது கூண்டில் அடைக்கப்பட்டது. சிறுத்தை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST