தமிழ்நாடு

tamil nadu

செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ்

ETV Bharat / videos

‘இணையதள வசதிகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்’ - அமைச்சர் அன்பில் மகேஷ் - அமைச்சர் அன்பில் மகேஷ்

By

Published : Mar 18, 2023, 10:24 PM IST

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தூய வளனார் கல்லூரியில் கைப்பந்து போட்டியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கல்லூரியில் நடைபெறும் ஸ்மார்ட் கல்வி குறித்த கருத்தரங்கில் ஸ்மார்ட் கல்வி குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றினார். 

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “மத்திய அரசுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால். WiFi வசதிகளை கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், அவர்கள் கல்விக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் நாங்கள் ஆசைபடுகிறோம். இப்போது கல்வி புரட்சி 4.0 என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வருகிறது என்றால், மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். 

கரும்பலகையில் பாடங்கள் சொல்லி கொடுத்த காலம் போய், ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தி வருகிறோம். ஆகையால் அதற்கு ஏற்றது போல் இணையதள வசதிகளை மேம்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட நூலகங்களில் தற்போது இணையதள வசதிகளை மேம்படுத்தியுள்ளோம். ஆகையால் மத்திய அரசும் இணையதள வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்காக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாகவே மாணவர்கள் அதிக அளவில் அரசு பள்ளிகளில் சேர்ந்து படித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கையே இருக்கும். சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதில் அதிகப்படியான நாட்டம் செலுத்த வேண்டும்.

அதில் தொடர்புடைய, அரசு பள்ளிகளைச் சார்ந்து பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வருகிறார். அரசு பள்ளியை நோக்கி அதிக அளவில் மாணவர்கள் வரும் நிலையில், அதை மேம்படுத்த வேண்டும் என்கிற வகையில்தான் தமிழ்நாடு கல்விக் கொள்கை இருக்கும் என்றார்.

இதையும் படிங்க:அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை.?  அவசர வழக்கு நாளை விசாரணை..

ABOUT THE AUTHOR

...view details