நடிகர்களை கொண்டாடுங்கள்.. ஆனால், பாரதியை மறந்துவிடாதீர்கள்.. தமிழிசை அட்வைஸ்.. - புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
தூத்துக்குடியில் நடந்த மகாகவி பாரதியாரின் 141ஆவது பிறந்த நாள் விழாவில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டார். அப்போது அவர், பாரதியார் விருதை எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் வெங்கடாசலபதிக்கு வழங்கினார். அதன்பின், இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் பாரதியை படியுங்கள். திரைப்பட நடிகர்களை கொண்டாடுங்கள் கட்அவுட் வையுங்கள். பாலாபிஷேகம் செய்யும் செய்யுங்கள். ஆனால் பாரதி போன்றவர்களை மறந்து விட்டு அதை செய்யாதீர்கள் என்று வேண்டுகோள்விடுக்கிறேன் எனத் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST