CCTV Video: ஓட்டுநர் கவனக்குறைவால் சாலையோரம் நின்றவர்கள் மீது மோதிய பேருந்து; 2 பேர் காயம் - bus accident
தஞ்சாவூர்: பழைய பேருந்து நிலையத்திலிருந்து ரெட்டிபாளையம் செல்வதற்காக மருத்துவக் கல்லூரி சாலையில் தனியார் மினி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பாலாஜி நகர் அருகே வரும்போது ஓட்டுநரின் கவனக் குறைவால், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டு இருந்த இரண்டு நபர்களை பேருந்து இடித்து தள்ளியது.
மேலும் அங்கு சாலை ஓரத்தில் பொதுமக்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளியும் அருகில் இருந்த மின்கம்பத்திலும் பேருந்துமோதி நின்றது. இதில் இருவர் பலத்த காயமடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த விபத்தில் பேருந்து இடிபாடுகளில் சிக்கி ஒரு கார், ஒரு ஆட்டோ, மற்றும் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஆகியவை முற்றிலும் சேதம் அடைந்தன. இந்த விபத்து குறித்து தஞ்சை தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சாலையோரம் இருந்தவர்களை இடித்து, இருசக்கர வாகனங்கள் மீதும் பேருந்து மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் நெகிழி மாற்றுபொருள் கண்காட்சியில் 75 வயது பாட்டிக்கு அடித்த ஜாக்பாட்!