Video: திருவள்ளூர் மாணவியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - Tiruvallur student
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி விடுதியில், திருத்தணி அடுத்த தெக்கலூர் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 8.30 மணி அளவில் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நடைபெற்று பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் அவருடைய சொந்த ஊரான தெக்கலூர் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST