தமிழ்நாடு

tamil nadu

விருகம்பாக்கம் ஆர்-5 காவல் நிலையத்தில் பெண் சட்ட ஒழுங்கில் பணியாற்றும் பெண் காவலர் அன்பரசி

ETV Bharat / videos

காவல் நிலையத்தில் வளைகாப்பு! பெண் காவலருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த போலீசார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 7:43 AM IST

சென்னை: விருகம்பாக்கம் ஆர்-5 காவல் நிலைய பெண் காவலருக்கு சக காவலர்கள் வளைகாப்பு நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

சென்னை, விருகம்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட ஆர்-5 காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் அன்பரசி. இவர் கருவுற்று நிறை மாத கர்ப்பிணியாக காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். 9 மாத நிறைமாத கர்ப்பிணியான அன்பரசிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை, வீட்டில் நடப்பது போன்று நடத்திட விருகம்பாக்கம் ஆர்-5 போலீசார் திட்டமிட்டு உள்ளனர். 

அதன்படி நேற்று (செப். 21) பெண் காவலர் அன்பரசி காவல் நிலையம் வந்தார். அப்போது அவருக்கு இன்ப அதிர்ச்சியாக வளைகாப்பு நிகழ்ச்சி, விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்களான பூபதி ராஜா மற்றும் சுமதி ஆகியோர் தலைமையில் நடத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என அனைவரும் பங்கு கொண்டு அன்பரசிக்கு சந்தனம், குங்குமம் மாலை அணிவித்து பூக்களை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.

காவல் நிலையத்தில் தன்னுடன் பணியாற்றும் சக பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசாரின் செயல் வரவேற்பை பெற்று உள்ளது. 

ABOUT THE AUTHOR

...view details