தமிழ்நாடு

tamil nadu

56 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

ETV Bharat / videos

தடை அதை உடை புது சரித்திரம் படை.. 56 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!

By

Published : May 20, 2023, 2:32 PM IST

நாமக்கல் மாவட்டம்:பள்ளிப்பாளையத்தில் யோகா கலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் 43 ஆண்டுகளுக்கு பிறகு தனது 56 வயதில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய தனம் என்பவர் 247 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளார். கல்வி கற்க வயது தடையில்லை என்பதை தனம் நிரூப்பித்து காட்டி உள்ளார். தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

இதில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், ராஜ வீதியை சேர்ந்தவர் தான் தனம் (வயது 56). இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு திருமணம் நிகழ்ந்ததால், இவரால் கல்விப் படிப்பை தொடர முடியவில்லை. இதன் பின்பு யோகா கலை கற்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யோகா கலையில் பட்டம் பயில வேண்டும் என்று விரும்பிய நிலையில் அதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி கட்டாயம் என்பதால் தனத்திற்உ பின்னடைவாக ஆனது. 

இருப்பினும் மனம் தளராமல் 10ம் வகுப்பு பயின்று தனித் தேர்வுகள் பிரிவில் பொதுத் தேர்வினை எதிர்கொண்டார். இதன் பயனாக தமிழில் 65 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 48 மதிப்பெண்களும், கணிதத்தில் 44 மதிப்பெண்களும், அறிவியலில் 46 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 44 மதிப்பெண்களும் என மொத்தம் 247 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்று உள்ளார். மேலும் தனது முயற்சிக்கு கிடைத்த வெற்றியை எண்ணி தனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளார்.

தனம் தேர்ச்சி பெற்றதை அவரது குடும்பத்தினர் உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து தனம் கூறுகையில் தனது இளம் வயது திருமணம் காரணமாக கல்வியை கற்க முடியாமல் கவலை அளித்து வந்த நிலையில், தற்போது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி தனக்கு மேலும் உத்வேகத்தை அளிப்பதுடன் யோகா சார்ந்த படிப்பில் பட்டம் பயின்று யோகா கலையை கற்பிக்கும் ஆசிரியராக மாறுவேன் என்று நம்பிக்கை அளித்தார்.

மேலும், கல்வியை கற்க வயது தடையில்லை என்பதை அனைவரும் அறிந்து கல்வி மீது ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தனம் கேட்டு கொண்டார்.

இதையும் படிங்க:மழையில்ல... ஆனா ரோட்டுல வெள்ளம்... அலட்சியத்தால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்!

ABOUT THE AUTHOR

...view details