தமிழ்நாடு

tamil nadu

vellore

ETV Bharat / videos

போக்குவரத்து காவலருடன் மல்லுகட்டிய வாகன ஓட்டி.... நடந்தது என்ன? - வேலூர் அண்மைச் செய்திகள்

By

Published : Jul 12, 2023, 4:58 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம், பென்னாதுரையைச் சேர்ந்தவர், சதீஷ். இவர் தனியார் நிறுவனத்தில் 407 என்ற ரக வாகனத்தின் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் இன்று சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து சிக்னலை மீறி சென்றதாக, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கன்னியப்பன் மற்றும் மேகநாதன் வண்டியை மடக்கிப் பிடித்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அப்பொழுது ஓட்டுநருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கும் கடும் வாக்குவாதம் நிலவியது. இதில் 407 ரக வாகன ஓட்டுநர், தன்னை உதவி ஆய்வாளர் கன்னியப்பன் தாக்கினார் என்ற கடுமையான குற்றச்சாட்டை வைத்து தனது மொபைலில் வீடியோ எடுக்கத் தொடங்கினார். இதனையடுத்து அங்கு உள்ள பொதுமக்கள் அனைவரும் திடீரென சூழ்ந்ததால் காட்பாடி திருவலம் சாலை, வேலூர் சித்தூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details