தமிழ்நாடு

tamil nadu

ஊருக்குள் சீறிப்பாய்ந்த இன்னோவா கார்

ETV Bharat / videos

ஊருக்குள் சீறிப்பாய்ந்த இன்னோவா காரினால் நிகழ்ந்த சோகம் - innova car accident

By

Published : May 22, 2023, 8:30 PM IST

ஆனேகல் (பெங்களூரு):தமிழக - கர்நாடகா எல்லைப் பகுதியான ஜூஜூவாடியில் காவல் துறையினர் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிணங்க ஒரு இன்னோவா கார் ஒன்று மிக வேகமாக வந்துள்ளது. சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றதனை அடுத்து அந்த இன்னோவா காரினை காவல் துறையினர் பின்பற்றினர். போலீஸ் பின்தொடர்வதை அறிந்த காரில் இருந்த கூட்டம் எங்கும் நிற்காமல் பல்லூர் கிராமத்தினுள் நுழைந்தது. 

அங்கு சரியாக மாட்டிக்கொண்ட அந்த இன்னோவா காரின் ஓட்டுநர் அங்குமிங்குமாக காரை திருப்பி குறுக்கே வந்த பைக், பொது மக்கள் என எதையும் கண்டு கொள்ளாமல் அவர்கள் மீது ஏற்றிச் சென்றார். இச்சம்பவத்தினால் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். திடீரென நடந்த இந்த சம்பவத்தினால் நடப்பது அறியாத பொது மக்கள் திகைத்து ஓடினர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர், அந்தக் காரில் நான்கில் இருந்து ஐந்து பேர் வரை இருந்ததாகவும், மேலும் அவர்கள் சட்டவிரோதமாக மதுவை கடத்திச் சென்றுள்ளனர். அதனால் தான் போலீஸை பார்த்து நிற்காமல் வேகமாகச் சென்றனர் என்று தெரிவித்துள்ளனர்.  

இதனைத் தொடர்ந்து அந்த காரிலிருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களின், மேல் அட்டிபெலே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த கார் பல்லூர் கிராமத்தில் அதி விரைவாக குறுக்கே வந்த மோட்டார் பைக்குகளை ஏற்றிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை இணையத்தில் வெளியிட்டுள்ளது காவல் துறையினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ காண்போர் நெஞ்சை பதைபதைக்கச் செய்கின்றது. 

இதையும் படிங்க:கர்நாடகாவில் 9 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்... ஏடிஆர் ஆய்வில் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details