"குறுக்க இந்த கௌசிக் வந்தா": முதலமைச்சர் பிரசார வழித்தடத்தில் குறுக்கே வந்த எம்ஜிஆர் வேடமிட்ட கலைஞர்! - artist impersonating MGR came across DMK campaign
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் இறுதி கட்ட பரப்புரை நேற்று நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில் வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பிரசாரம் மேற்கொள்ளும் பார்க் சாலை மற்றும் மஜீத் வீதியில் அவரை வரவேற்க திமுகவினர் அதிக அளவில் காத்திருந்தனர்.
அப்போது அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக எம்ஜிஆர் வேடமிட்டு இருந்த கலைஞர் ஒருவர், திறந்தவேனில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு வந்தார். தொடர்ந்து முதலமைச்சர் செல்லும் வழியிலேயே அவர் வருவதற்கு முன்பாகவே அதிமுக நாடக கலைஞர் சென்று கொண்டிருந்ததால் திமுகவினர் கடும் கோபத்துக்குள்ளானார்கள்.
மேலும், மஜீத் வீதியில் சென்ற எம்ஜிஆர் வேடம் அணிந்து வாக்கு கேட்ட நாடக கலைஞர் வாகனத்தை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என திமுக மாவட்ட நீலகிரி மாவட்ட செயலாளர் ஒலி பெருக்கியில் கேட்டுக் கொண்டதால் அனைவரும் அமைதி காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.