தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஈரோடு புஞ்சை புளியம்பட்டியில் அம்புசேர்வைப் பெருவிழா - கரிவரதராஜ பெருமாள்

By

Published : Oct 6, 2022, 10:51 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டியில் 600 ஆண்டுகால பழமை வாய்ந்த கரிவரதராஜபெருமாள் கோயில் மற்றும் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் அம்புசேர்வை நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர். மாரியம்மன் கோயிலிலிருந்து சுவாமி அழைப்பிற்காக அவினாசி சாலையில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பூஜிக்கப்பட்ட மாலைகளுடன் சென்றனர். கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பெருமாள் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சிக்காக குதிரை வாகனத்தில் உள்ள கரிவரதராஜபெருமாள் வாழை மரத்தை நோக்கி அம்பினை எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details