தமிழ்நாடு

tamil nadu

விருது வழங்கும் நிகழ்ச்சியில் திருநங்கையுடன் பாடல் பாடிய அதிமுக எம்எல்ஏ

ETV Bharat / videos

விருது வழங்கும் நிகழ்ச்சியில் திருநங்கையுடன் மேடையில் பாடல் பாடி Vibe செய்த அதிமுக எம்எல்ஏ! - AIADMK MLA Govindaswamy

By

Published : Apr 2, 2023, 2:18 PM IST

தர்மபுரி:திருநங்கைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் திருநங்கையுடன் பாடல் பாடி அசத்தினார், அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி. 

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒட்டப்பட்டியில் தனியார் அமைப்புகள் சார்பில் சர்வதேச திருநங்கைகள் விழா மற்றும் திருசக்தி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுகவைச் சார்ந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினரான கோவிந்தசாமி, அனைத்து திருநங்கைகளையும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஜீவஸ்ருதி இசை குழுவைச் சார்ந்த கோபிகா என்ற திருநங்கை விருது பெற்றுக்கொண்டு, ''தூதுவளை இலை அரைச்சு'' என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தார். திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் வகையில் பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமியும் திருநங்கையுடன் இணைந்து தூதுவளை இலை அரைத்து பாடலைப் பாடி அரங்கில் இருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். அரங்கிலிருந்தோர் இதனைக்கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details