திருக்குறள் போட்டியில் வென்ற மாணவிக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து! - திருக்குறள் போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள செரளப்பட்டி பள்ளியில் பயிலும் 7-ஆம் வகுப்பு மாணவி ராஜஹரிணி, தமிழ்நாடு அளவில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பிடித்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஊக்கப்பரிசு வழங்கினார். பின்னர் மாணவி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்பு திருக்குறளின் ஒரு அதிகாரத்தை முழுமையாக ஒப்புவித்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST