தமிழ்நாடு

tamil nadu

கிரிக்கெட் விளையாடிய நமிதா

ETV Bharat / videos

பாஜக சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டி - பவுலிங் செய்த நமீதா; ரசிகனாக மாறி ஆர்ப்பரித்த தொண்டர்கள்! - namitha

By

Published : May 14, 2023, 5:24 PM IST

கோயம்புத்தூர் தெற்கு பாஜக சார்பில் ‘பாஜக குடும்ப பிரிமியர் லீக்’ கிரிக்கெட் விளையாட்டு போட்டி மதுக்கரை பகுதியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியை நடிகையும், பாஜக நிர்வாகியுமான நமீதா கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நமீதா, ''அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். இன்று (மே 14) எனது முதல் அன்னையர் தினம், அதனால் இந்த நிகழ்ச்சியை முடிந்தவுடன் உடனடியாக சென்னை கிளம்பி வீட்டிற்குச் செல்ல உள்ளேன். பாஜக மட்டும் தான், கட்சி உறுப்பினர்களை ஒருங்கிணைக்க இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. 

மைசூரு சிங்கம் அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் பாஜக கட்சி நன்கு முன்னேறி வருகிறது. அதன் காரணமாகத் தான் எங்கு சென்றாலும் பாஜக பெயர் ஒலிக்கிறது'' என்றார். 

பின்னர், கர்நாடகத் தேர்தல் தோல்விக்கு காரணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ''பாஜக தலைவர் அண்ணாமலையின் கவனம் தமிழ்நாட்டின் மீது இருக்கலாம். அவர் தனது பணியை சிறப்பாக செய்வார். என் தலைவரைப் பற்றி இவ்வாறு பேசக்கூடாது'' எனத் தெரிவித்தார். 

மேலும், '' கர்நாடகா தோல்வி பெரிய பிரச்னை இல்லை, அடுத்த முறை வெற்றி பெறலாம். பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி ஆகியோர் மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. எனவே, இன்று வெற்றிபெறவில்லை என்றால் நாளை வெற்றி பெற்று விடலாம்'' என்றார்.

இதையும் படிங்க:கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றியை தமிழ்நாட்டில் கொண்டாட காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details