வீடியோ: "சார்பட்டா மாரியம்மா" நத்தம் மாரியம்மன் கோயிலில் தரிசனம் - சார்பட்டா பட கதாநாயகி துஷாரா விஜயன்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயிலில் மாசி பெருந்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து மாவிளக்கு, கரும்புத் தொட்டில், பொங்கல் வைத்து நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுகு மரம் ஏறுதல் மற்றும் பூக்குழி இறங்குதல் மார்ச் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே, சார்பட்டா பட கதாநாயகி துஷாரா விஜயன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.