தமிழ்நாடு

tamil nadu

சித்தா படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

ETV Bharat / videos

Chittha Movie : சித்தார்த்தின் 'சித்தா' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு! - எஸ் யு அருண்குமார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 7:53 AM IST

திண்டுக்கல்:நடிகர் சித்தார்த்தின் சொந்த தயாரிப்பில் உருவாகி உள்ள சித்தா திரைப்படத்தின் சிங்கிள் டிராக் பழனியில் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. நடிகர் சித்தார்த் தனது சொந்த தயாரிப்பில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பாசமுள்ள சித்தப்பாவாக நடித்து உள்ள படம் "சித்தா". இந்நிலையில் சித்தா திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் (single track) வெளியிட்டப்பட்டது. 

பண்ணையாரும்-பத்மினியும், சேதுபதி போன்ற படங்களை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கதாநாயகனாக நடிகர் சித்தார்த், நாயகியாக நிமிஷா, அறிமுக பெண் குழந்தை நட்சத்திரமாக முக்கிய கதாபாத்திரத்தில் திபுவும் நடித்து உள்ளனர். நினன் இசையமைத்து உள்ள சித்தா திரைப்படம் முழுக்க, முழுக்க பழனி சுற்றுவட்டார பகுதியில் படமாக்கப்பட்டது. 

படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம் பழனி என்பதால் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியீட்டு விழாவை பழனியில் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. இதையடுத்து படத்தின் சிங்கிள் டிராக்கை நடிகர் சித்தார்த் வெளியிட்டார். தொடர்ந்து சித்தார்த் கூறியதாவது, "8 வயது குழந்தைக்கும், அவளது சித்தப்பாவான எனக்குமான கதை தான் சித்தா. 

காணாமல் போன குழந்தையை தேடும் சித்தப்பாவின் தருணத்தை ஆக்சன் மற்றும் திரில்லர் நிறைந்த கதையாக சொல்லப்பட்டுள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது. அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

ABOUT THE AUTHOR

...view details