Shiva rajkumar: "நானும் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் தான்" - சிலாகிக்கும் சிவ ராஜ்குமார்! - kollywood updates
சென்னை: கன்னட மொழி சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் சிவ ராஜ்குமார். ரஜினிகாந்த் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தில் சிவ ராஜ்குமார் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். படத்தில் இரண்டு அல்லது மூன்று காட்சிகளில் வந்தாலும் திரையரங்குகளில் ரஜினிக்கு ஈடாக சிவ ராஜ்குமாருக்கு விசில் பறந்தது. தற்போது தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் சிவராஜ் குமார் மேலும் நிறைய தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் சென்னை வந்த சிவ ராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் சந்தித்து பேசினார். அப்போது “ஜெயிலர் திரைப்படத்தை நான் மைசூரில் தான் பார்த்தேன். படம் நன்றாக வந்துள்ளது. திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த நெல்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
'ஜெயிலர்' படம் தமிழ்நாடு மக்களிடம் எனக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. நான் சென்னையில் பிறந்து வளர்ந்து, கல்லூரி படிப்பை முடித்தேன். ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஒன்றாக நடித்தது என்பது மிகப்பெரிய வாய்ப்பு. இதுபோன்ற வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இப்போது நான் தனுஷ் உடன் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என கூறினார்.