தமிழ்நாடு

tamil nadu

Tirunelveli

ETV Bharat / videos

சகோதரன் உயிரிழந்த நிலையிலும்.. கடமை தவறாத ரேஷன் கடை பெண் ஊழியர்! நெகிழ வைக்கும் வீடியோ! - leema

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 10:34 PM IST

திருநெல்வேலி: நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் லீமா. இவர் நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் எழுத்தாளராக பணிபுரிந்து வருகிறார். 

தற்போது தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனவே லீமா தான் பணிபுரியும் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 

அப்போது திடீரென அவருக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் லீமாவின் சகோதரர் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த லீமா, அந்த இடத்திலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இருப்பினும் லீமா சில நொடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கண்ணும் கருத்துமாக தனது பணியை தொடர்ந்தார்.

சகோதரர் இழப்பு அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தாலும் கூட பொதுமக்கள் காலை முதல் பொங்கல் தொகுப்பு பெறுவதற்கு வரிசையில் காத்திருந்ததால் அவர்களை சிரமப்படுத்தாமல் சோகத்தை தனக்குள் வைத்துக் கொண்டு லீமா தொடர்ந்து பொங்கல் தொகுப்பை வழங்கி வந்தார். 

ABOUT THE AUTHOR

...view details