தமிழ்நாடு

tamil nadu

sathyamangalam, erode

ETV Bharat / videos

சத்தியமங்கலம் அருகே உலா வந்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு - sathyamangalam

By

Published : Jul 21, 2023, 1:12 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. 

இதற்கிடையே நேற்று (ஜூலை 20ஆம் தேதி) மாலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்தது. அப்போது சாலைகளில் கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் யானையைக் கண்டு அச்சம் அடைந்து வாகனங்களை நிறுத்தினர். 

மேலும், காட்டு யானை சிறிது நேரம் வாகனங்களை வழிமறித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சாலையோரமாக சென்ற காட்டு யானை வாகனங்களை கண்டு கொள்ளாமல் சாலையோரமாக நடந்து சென்றது. இந்த காட்சியை அவ்வழியே சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

ABOUT THE AUTHOR

...view details