வீடியோ: சிவகங்கையில் அரண்மனை முன்பு பழங்கால கார்களின் கண்காட்சி - செட்டிநாடு ஹெரிடேஜ் கண்காட்சி
சிவகங்கை மாவட்டம்காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு குமர ராணி மீனா முத்தையா ஆட்சி அரண்மனை முன்பு பழங்கால கார்களின் செட்டிநாடு ஹெரிடேஜ் கண்காட்சி நடந்தது. மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரின் கிளப் சார்பில் நடந்த இந்த கண்காட்சியில் 1914 ஆண்டு முதல் 1991 வரையில் வெளியான பழங்கால கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
ஜெர்மன் பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தயாரித்த கார்கள் பொதுமக்களை கவர்ந்தது. 1886-களில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் ரக மாதிரி கார் அனைவரையும் வியக்க வைத்தது. வெளிநாட்டினர் உட்பட பலரும் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.