6 அடி நீள தாடியில் 2 சிலிண்டர்களை தூக்கிய துறவி.. வைரலாகும் வீடியோ! - கோல்புராவில் உள்ள அனுமன் கோயில்
ராஜஸ்தான்: பரத்பூர் நகரைச் சேர்ந்த 70 வயதான துறவி புனித ஜான்கிதாஸ். பரத்பூர் நகரின் மதுரா பைபாஸில் அமைந்துள்ள கோல்புராவில் உள்ள அனுமன் கோயிலில் வசிக்கிறார். இவர் காலை, மாலை என இருவேளை ஆரத்தி வழிபாடு பாடங்கள் மற்றும் கோயிலைக் கவனித்துக்கொள்ளும் வேலையைச் செய்து வருகிறார்.
இக்கோயிலில் பல ஆண்டுகளாக வசித்து வரும் புனித ஜான்கிதாஸ் சுமார் 6 அடி நீளமுடைய தாடியுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், குருபூர்ணிமா நாளில் மக்களின் மத்தியில் மற்றொரு நபரின் உதவியுடன் எரிவாயு நிரப்பப்பட்ட இரண்டு சிலிண்டர்களை தனது தாடியில் ஒரு துண்டுடன் கட்டி தூக்குகிறார்.
சுமார், 56 கிலோ எடையை அசால்டாக தூக்கிய துறவி புனித ஜான்கிதாஸின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதனை பகிர்ந்து வரும் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மேட்டூர் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிறப்பித்த ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!