Video Leak: சேலம் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர் லஞ்சம் வாங்கும் பரபரப்பு வீடியோ! - லஞ்சம்
சேலம்: வேம்படிதாளம் துணை மின் நிலையம் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் உதவி பொறியாளர் அலுவலகமானது, இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு விசைத்தறி, விவசாயம், வீடு மற்றும் கடைகள் உள்ளிட்டவற்றிற்கு மின் இணைப்பு பெற வரும் பொது மக்களிடம் அதிகம் லஞ்சம் வாங்குவதாக தொடர் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் கே.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஜெயக்குமார் (போர்மேன்) என்பவர் மின் இணைப்பு பெற வரும் நபர்களிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிப் பரவி வருகின்றன.