தமிழ்நாடு

tamil nadu

ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு: பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளி மாணவி

ETV Bharat / videos

ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு: மரக்கன்றுகளை வழங்கிய பள்ளி மாணவி - skating at Thoothukudi

By

Published : Jul 29, 2023, 4:57 PM IST

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ளது கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில். இங்கு சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பாக  ‘மரம் நடுவோம் மழை பெறுவோம்’ என்பதை வலியுறுத்தி பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பள்ளி மாணவி ரவீணா ஸ்கேட்டிங் மூலம் பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி கழுகாசல மூர்த்தி கோவில் முன்பு இருந்து தொடங்கிய ஸ்கேட்டிங் ஆர்.சி. சர்ச் வரை 2 கிலோ மீட்டர் தூரம் நீடித்தது. காவல் நிலையம் முன்பு தெற்கு ரத வீதி, கீழ ரத வீதி, மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஸ்கேட்டிங் செய்து பொதுமக்களுக்கு 1000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவி வழங்கினார்.

இந்நிகழ்வில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகர் ராஜகோபால், கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு மலையாண்டி, வசந்த், திருவள்ளுவர் கழக தலைவர் பொன்ராஜ்பாண்டியன், பொருளாளர் முருகன், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன், ராஜ்மோகன், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் ராமமூர்த்தி, தொழிலதிபர் நடராஜன், மாணவியின் பெற்றோர்கள்,விஜயன்,ரம்யா, திருக்கோயில் தலைமை எழுத்தர் மாடசாமி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details