தமிழ்நாடு

tamil nadu

ஜிஎஸ்டி சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்

ETV Bharat / videos

ஜிஎஸ்டி சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்! - etv bharat tamil

By

Published : Jul 25, 2023, 12:03 PM IST

Updated : Jul 25, 2023, 4:26 PM IST

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாலாஜி. இவருக்கு சொந்தமாக பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்று உள்ளது. இந்த நிலையில் குன்றத்தூரை சேர்ந்த கார் ஓட்டுநர் பார்த்தசாரதி(22) திருவல்லிக்கேணியில் இருந்து பிஎம்டபிள்யூ(BMW) காரில் தாம்பரத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார். 

குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியே வந்துள்ளது. அப்போது காரை நடுரோட்டில் பார்த்தசாரதி நிறுத்தியுள்ளார். திடீரென காரில் தீப்பிடித்து எரிந்ததால், அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி காரில் இருந்து வெளியே குதித்துள்ளார். 

இதையடுத்து சொகுசு காரில் பிடித்த தீ மளமளவென எரியத் தொடங்கியுள்ளது. பின்னர் இதுகுறித்து தாம்பரம் தீயணைப்புத்துறைனருக்கு உடனடியாக தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி சொகுசு காரில் பற்றிய தீயை அணைத்தனர்.  

ஆனால் சொகுசு கார் தீயில் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. தற்போது இது குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஓட்டுனர் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த கார் தீ விபத்தால் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Last Updated : Jul 25, 2023, 4:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details