தாசில்தார் அலுவலகத்தில் 5 அடி நீள பாம்பு.. வாணியம்பாடி ஷாக்! - வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
திருப்பத்தூர்: வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியோர்களுக்கு வழங்குவதற்காக வேட்டி, சேலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அலுவலக ஊழியர்கள் நியாய விலை கடைகளுக்கு அனுப்புவதற்காக வேட்டி, சேலையை எடுத்த போது அதில் சுமார் 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு வெளியே வந்துள்ளது.
பின்னர் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கண்ணாடி விரியன் என்ற விஷப்பாம்பினை பிடித்து சென்று வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.