குடியிருப்புக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு! போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!
Published : Dec 2, 2023, 7:46 PM IST
திருப்பத்தூர் : நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் இவருடைய வீட்டின் அருகே உள்ள நிலத்தில் திடீரென மலைப்பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. இதனைப் பார்த்த ராமச்சந்திரன் உடனடியாக, நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சிறிது நேரம் போராடி புதருக்குள் பதுங்கி இருந்த 12 அடி நீளம் உடைய மலைப்பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டனர். மேலும், மீட்கப்பட்ட மலைப்பாம்பை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், ஊர்வன போன்ற உயிரிகள் மக்கள் நடமாடும் பகுதிக்குள் வருவது வாடிக்கையாகி விட்டது. அதனால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும். ஊர்வன போன்ற உயிரிகளைப் பிடிக்கும் முயற்சியிலும், அதனை அடிக்கும் முயற்சியிலும் ஈடுபட கூடாது. உடனடியாக அருகில் இருக்கும் தீயணைப்புத்துறை அல்லது வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" என்றனர்.