3 மாதமாக நடுக்கடலில் தவித்த குரங்கு பத்திரமாக மீட்பு! - கடலில் குரங்கு சிக்கித் தவிப்பு
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் நேற்று கடலில் குரங்கு ஒன்று பிடிபட்டது. கடலில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தடுப்பில் மூன்று மாதங்களாக சிக்கித் தவித்து வந்த குரங்கை ஆந்திரா மாநில தொண்டு நிறுவனத்தினர் பத்திரமாக மீட்டனர். கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் குரங்கு சிக்கத் தவிப்பது குறித்து தொண்டு நிறுவனத்திற்கு தெரிவித்தனர். இதையடுத்து, மீனவர்கள் உதவியுடன் குரங்கை மீட்டு, காக்கிநாடா வன அலுவலகத்துக்கு தெரியப்படுத்தி, அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர். குரங்கு அவ்விடத்திற்கு எப்படி சென்றது என்று தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST