பேருந்து சக்கரத்தில் சிக்கி தீப்பற்றிய பைக்- பயணிகள் அலறியடித்து ஓட்டம்! - தீ
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள ஹம்பன்கட்டா (Hampankatta) சிக்னலில், பைக் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மோதியது. இந்த நிலையில் பேருந்தின் சக்கரத்திற்குள் சிக்கிய பைக்கின் பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறி, தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து பேருந்திற்குள் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். இந்த விபத்தில் பைக்கை ஓட்டிவந்த தயாளன் படுகாயமுற்றார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. விபத்தானது வெள்ளிக்கிழமை (ஏப்.9) மதியம் 2.30 மணிக்கு நிகழ்ந்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST