ஓதுவது ஒழியேல்; வாசிப்பை ஊக்குவிக்கும் சுவரோவியங்கள்! - ஷாஹீத் கர்தார் சிங் சரபா
நவீனத்துவம் புத்தகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில், மக்களுக்கும் புத்தகங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க பர்னாலாவின் திவானா கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பாராட்டத்தக்க முயற்சியை மேற்கொண்டுள்ளனர். 'ஷாஹீத் கர்தார் சிங் சரபா' என்ற பெயரில் ஒரு நூலகத்தை அவர்கள் அமைத்துள்ளனர். அங்கு மக்களுக்குத் தேவையான ஏராளமான புத்தகங்கள் கிடைக்கின்றன. வாசிப்புப் பழக்கமும் தூண்டப்படுகிறது. வாசிப்பை ஊக்குவிக்கும் சுவரோவியங்கள் குறித்துப் பார்க்கலாம். ஓதுவது ஒழியேல்!