மஜ்ஜி கௌரம்மா திருவிழா; மாட்டு வண்டி பூட்டி சீர் சுமந்து சென்ற பெண்கள்! - சௌடுவாடா
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சௌடுவாடா கிராமத்தில் மஜ்ஜி கௌரம்மா திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் தாம்பூலங்களில் 108 வகையான இனிப்பு பதார்தங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது ஆண்கள் வாழை தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி பூட்டி முன்னால் சென்றனர். இந்த இனிப்பு பதார்தங்கள் பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படும். இங்கு மஜ்ஜி கௌரம்மா திருவிழா வெகுபிரசித்தம்!