நாடார் வங்கி ? நாடார்களிடமே இருக்குமா?
மெர்க்கன்டைல் வங்கி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டால் நாடார்களின் உரிமை பறிபோய் விடும் என கண்ணன் ஆதித்தன் குற்றம் சாட்டியநிலையில், இதற்கு வாய்ப்பில்லை என கரிக்கோல்ராஜ் விளக்கம் அளிக்கிறார். 1921ஆம் ஆண்டு நாடார் வங்கி என்ற பெயரில் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி என பெயர் மாற்றம் பெற்றிருக்கும் வங்கியின் எதிர்காலம் என்ன?... பங்குச்சந்தையில் பட்டியலிடுவது நாடார்களின் உரிமையை பாதிக்குமா?... அல்லது செல்வநிலையை உயர்த்துமா?... வங்கியின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் நாடார் மகாஜன சங்கத்தின் பங்களிப்பு என்ன?... என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் என்றமுறையில் கரிக்கோல்ராஜ் 'ஈடிவி பாரத்' தமிழ்நாடு வலைத்தள பக்கத்திற்கு அளித்த பேட்டியை இங்கு காணலாம். கண்ணன் ஆதித்தன் தரப்பு விளக்கத்தையும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பிரச்சனை குறித்தும் நமது இணையதளம் பதிவு செய்துள்ளது. அதனை இந்த இணைப்பின் மூலம் படிக்கலாம்: https://bit.ly/3INfm4i
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST