தமிழ்நாட்டு மக்களுக்கான முழக்கங்களுடன் வைரலாகும் முகிலன் வீடியோ! - முகிலன்
சூழலியல் போராளி முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காணாமல் போன நிலையில் முகிலனின் கல்லூரித்தோழர் சண்முகம் ஆந்திராவில் உள்ள திருப்பதி ரயில் நிலையத்தில் முதல் பிளாட் பாரத்தில் முகிலனை பார்த்ததாக தெரிவித்துள்ளார். தாடி வளர்த்திய படி முகிலன் முழக்கமிட்டு சென்றதாக தெரிவித்தார். தற்போது முகிலன் ஆந்திர காவல்துறை பிடியில் உள்ளதாக சண்முகம் தெரிவித்தார். இதனால் தமிழ்நாடு காவல்துறை விரைவில் ஆந்திரா விரையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Last Updated : Jul 6, 2019, 11:20 PM IST