கலிபோர்னியாவில் தொடரும் காட்டுத்தீ: மக்கள் வெளியேற்றம் - கலிபோர்னியாவில் தொடரும் காட்டுத்தீ
கலிபோர்னியா: சில்வராடோ கனியன் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ சுமார் 11 சதுர மைல்களுக்கு அதிவேகமாகப் பரவியுள்ளது. அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அதனருகில் உள்ள மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சுமார் 113 கிமீ வேகத்தில் வீசும் காற்றால், தீ மளமளவென பரவிவருகிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.