நடந்தது என்ன? ஆப்பிரிக்க அமெரிக்கர் கொல்லப்பட்டது குறித்த வீடியோ வெளியீடு - அமெரிக்கா துப்பாக்கிச் சூடு
வாஷிங்டன்: அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவரை காவலர்கள் கைது செய்ய முயன்றபோது, அவர் தப்பித்துச் செல்ல முயன்றதால் காவலர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தார். காவல் துறையினர் செயலுக்கு எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.