அமெரிக்காவில் உறைந்த ஏரியில் சூரிய நமஸ்காரம் செய்த இந்தியர்!
தெலங்கானா மாநிலம் வெல்லுல்லா பகுதியைச் சேர்ந்த மரிபள்ளி பிரவீன், குஜராத் வதோதராவில் யோகா பயிற்சியாளராக உள்ளார். அதுமட்டுமின்றி, யோகா மூலம் சாதனைபுரிந்து லிம்கா புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள உறைந்த ஏரியில் 23 நிமிடங்களில் 108 சூரிய நமஸ்கார யோகாசனங்களைச் செய்துள்ளார். பிரவீன் ஆசனம் செய்யும்போது மூன்று டிகிரி வெப்பநிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.