இப்படியும் டென்னிஸ் விளையாடலாம்... ஊரடங்கில் கலக்கிய இத்தாலி பொண்ணுங்க! - Italian girls rooftop video
ரோம்: இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் வீட்டிலேயே உள்ளனர். அப்போது தனது பக்கத்து வீட்டு தோழியுடன் டென்னிஸ் விளையாட முடியாமல் தவித்த பெண்ணுக்கு புதிய யோசனை தோன்றியது. இரண்டு பெண்களும் அவரவர் வீட்டு மாடியில் நின்று கொண்டு அசால்டாக டென்னிஸ் விளையாடினர். தற்போது, இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.