அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேவுள்ள காடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் காட்டுத்தீ ஏற்பட்டது. வேகமாக பரவிய இந்தத் தீ தற்போதுவரை 59.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள காடுகளை அழித்துள்ளது. மேலும், இந்தத் தீ காரணமாக 21 கட்டடங்கள் முற்றிலும் நாசமடைந்துள்ளன. இதுதவிர 5400க்கும் மேற்பட்ட வீடுகள் இந்தக் காட்டுத்தீயால் பெரும் அபாயத்தில் உள்ளன. இதை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர். வரும் நாட்களில் கலிபோர்னியா மாகாணத்தின் வெப்ப நிலை அதிகரிக்கும் என்பதால், தீயை பரவவிடாமல் அணைப்பது தீயணைப்பு வீரர்களுக்கு சவால் மிகுந்ததாக உள்ளது.