முண்டியடித்து ஓட்டு கேட்ட வேட்பாளர்கள் : வடிவேலு பாணியில் வேட்பாளர்களை குழப்பிய மக்கள் - தேர்தல் பிரச்சாரம்
திருவள்ளூர்:முகமது அலி தெருவில் உள்ள மஸ்ஜிதே உஸ்மான் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து வெளியே வந்தவர்களிடம் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இதனால் செய்வதறியாது திகைத்த வாக்காளர்கள், அனைத்து கட்சியினருக்கும் ஆதரவு தருவோம் என தெரிவித்தனர். .இது வடிவேலு காமெடியான “தென்னமரத்துக்கு ஒரு குத்து,ஏணி சின்னத்துலையும் ஒரு குத்து” என்கிற பாணியில் அமைந்திருந்தது.
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST